வைணவ உரைகளும் தமிழ் மரபும், ம.பெ.சீனிவாசன், 13 ஆகஸ்ட் 2016


தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை
(Tamil Heritage Trust)
​​presents
​​
வைணவ உரைகளும் தமிழ் மரபும்
by 
​முனைவர் ம.பெ.சீனிவாசன்

at 5.30​ PM​ on Saturday, ​August 13th, 20​​16
​​
at Arkay Convention Center, 
146/3 R.H.Road, OMS Lakshana (Above Shah Electronics), Mylapore, Chennai

​நாலாயிர திவ்வியப் பிரபந்தத்துக்கு திருக்குருகைப் பிரான் பிள்ளான் , நஞ்சீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை, அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர் போன்றோர் தமிழும் வடமொழியும் கலந்த மணிப்பிரவாளத்தில் உரை எழுதியுள்ளனர். இருமொழியும் கலந்துள்ள காரணத்தால் இது பெரும்பாலானோரைப் போய்ச் சேரவில்லை. 12-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 14-ம் நூற்றாண்டு வரை எழுதப்பட்ட இந்த உரைகளில் தமிழ் இலக்கிய மரபு மட்டுமல்ல, தமிழர்தம் வாழ்வியல் மரபும் பொதிந்துள்ளன.

பேராசிரியர் முனைவர் ம.பெ.சீனிவாசன், சிவகங்கையை அடுத்த சேந்தி உடையநாதபுரம் என்னும் சிற்றூரில் பெரியசாமி, சிட்டாள் ஆகியோருக்குப் பிறந்தவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பயின்று 34 ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். ஆழ்வார்களின் அருளிச் செயல்களையும் வியாக்கியானங்களையும் விரும்பிக் கற்று அத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். வைணவ இலக்கியங்கள் குறித்துப் பல புத்தகங்களை எழுதியுள்ளார். பிற தமிழ் இலக்கியங்கள் குறித்தும் புத்தகங்கள் எழுதியுள்ளார். இராமானுஜர் குறித்தும் பெரியாழ்வார் குறித்தும் இவர் எழுதியுள்ள வாழ்க்கை வரலாற்று நூல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

​மாதம் தோறும் ​தமிழ் பாராம்பரியம் நடத்தும் ​​கூட்டத்தில்​, ஆகஸ்ட் 2016 நிகழ்வாக, வைணவ வியாக்கியானங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ளும் தமிழர் மரபு குறித்து முனைவர் ம.பெ.சீனிவாசன் பேசுவார்.​ அனைவரும் வருக.​


RSVP:​​

S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494

Tags: Video