சிலப்பதிகாரச் சிக்கல்கள் - இந்திரா பார்த்தசாரதி

தமிழ்ப் பாரம்பரியம்
(Tamil Heritage Trust)
presents
சிலப்பதிகாரச் சிக்கல்கள்

by 
இந்திரா பார்த்தசாரதி

at 5.30pm on Saturday, July 5th, 2014
at Vinoba Hall, Thakkar Bapa Vidyalaya, T Nagar.

About the topic:
சிலப்பதிகாரம் எப்போது இயற்றப்பட்டது? சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ, சேரன் செங்குட்டுவனின் தம்பியா? இளங்கோ ஒரு சமணத் துறவியா? வஞ்சிக்காண்டம் சிலப்பதிகாரத்தில் பிற்சேர்க்கையா? சிலப்பதிகாரத்தின் வேறு எந்தப் பகுதிகளைப் பிற்சேர்க்கை என்று கருதலாம்? இளங்கோவும் மணிமேகலையை எழுதிய சாத்தனாரும் சமகாலத்தவர்களா?

சிலப்பதிகாரத்தில் காணப்படும் நாடக, நடன இலக்கணச் செய்திகளுக்கும் பரத முனியின் நாட்டிய சாஸ்திரத்தில் வரும் செய்திகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஆனால் அதே நேரம் சிலப்பதிகாரத்தில் உள்ள பல இசை, நடன, நாடகச் சொற்களுக்கான விளக்கத்தை வடமொழி நூல்களில் உள்ள சொற்கள்மூலம் அறிந்துகொள்ள முடியவில்லை என்று உ.வே.சா சொல்கிறார். பரத முனியே தமிழகத்தைச் சேர்ந்தவரா? தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் அவர் நூல்களை எழுதி, தமிழில் அவர் எழுதிய நூல் கிடைக்காமல் போய்விட்டதா?

இதுபோன்ற பல கேள்விகளை எழுப்பும் இந்திரா பார்த்தசாரதி, அவற்றுக்கான விடைகளைத் தேடுகிறார். சிலப்பதிகாரமே இந்திய மொழிகளின் முதல் கலை, இலக்கியக் களஞ்சியம் என்கிறார் இந்திரா பார்த்தசாரதி.

About the Speaker:
இந்திரா பார்த்தசாரதி, தமிழின் முதன்மைப் படைப்பாளி. சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று எழுதினாலும், நாடக ஆசிரியராகவே அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். குருதிப்புனல் நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். பாரதிய பாஷா பரிஷத் விருது, சரஸ்வதி சம்மான் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். இந்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது பெற்றவர். இந்திரா பார்த்தசாரதி, தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நிகழ்கலைத்துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றபின் தற்போது சென்னையில் வசித்துவருகிறார்.

RSVP:
A. Annamalai: Gandhi Study Centre - gandhicentre@gmail.com;
Badri Seshadri - Kizhakku-p-padippakam - badri@nhm.in; 98840-66566
S. Kannan - musickannan@gmail.com; 98414-47974
S. Swaminathan - sswami99@gmail.com; 2467 1501
R. Gopu - writergopu@yahoo.com, 98417-24641
T. Sivasubramanian - siva.durasoft@gmail.com, 98842-94494